அனிருத்துடன் பழகியதை அவமானமாக கருதுகிறேன்" நடிகை ஆண்ட்ரியா!

Saturday,18th of August 2012
சென்னை::கோடம்பாக்கத்தின் மூலைமுடுக்கெல்லாம் தற்போது புகைந்துகொண்டிருப்பது நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்டுக் கொண்டதைப் பற்றி தான். இணைதளத்தில் யாரோ வெளியிட்ட இந்த புகைப்படங்களால் அத்தனை நடிகர், நடிகைகளும் திகைத்துபோய் இருக்கிறார்கள்.

'3' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், ஒரே படத்தில் வெற்றியின் உச்சத்தில் சென்று விட்டார் என்பதை தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவே அறிந்ததுதான். 21 வயதான அனிருத்திடம் 30வயதை தொடும் ஆண்ட்ரியாவிம் எப்படி காதல் வயப்பட்டார்கள், என்று ஒட்டு மொத்த கோடம்பாக்கமே தலையை சொறிய, இந்த காதல் ஜோடி சத்தமே இல்லாமல் தலைமறைவாகிவிட்டது.

இந்த நிலையில் ஆண்ட்ரியா மட்டும் இதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இந்த முத்தக்காட்சி படங்கள் குறித்து கூறிய ஆண்ட்ரியா, "நானும் அனிருத்தும் முத்தமிட்டது 18 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் தான் வந்துள்ளன. அதனை ஒரு அவமானகரமான சந்திப்பாகவே கருதுகிறேன். அப்போது எங்களுக்குள் இனிமையான உறவு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது முறிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு வழிகளில் சென்று விட்டோம்.

என்னைப் பற்றி வரும் இதுபோன்ற வதந்திகளை நான் பொருட்படுத்துவது இல்லை. என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. தொழிலில் மேலும், மேலும் உயர உழைத்துக் கொண்டு இருக்கிறேன்." என்றார்.

Comments