
சென்னை::* த்ரிஷாவின் இணை பிரியா நண்பர் ராணா, இந்தி படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பதால் மும்பையில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்துள்ளார்.
* ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த அபிநயா தற்போது ‘மேளதாளம்’ என்ற படத்தில் நடிப்பதுடன் லால் ஜோடியாக ‘ஐசக் நியூட்டன் சன் ஆப் பிலிப்போஸ்’ என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார்.
* அஜீத்துடன் ‘பில்லா 2’ படத்தில் நடித்த ஹியுமா குரேசி, ‘கேங்க் ஆப் வசேப்புர்’ இந்தி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
* வெற்றிமாறன் தயாரிப்பில் அவரது உதவியாளர் மணிகண்டன் இயக்கும் படத்தில் சித்தார்த் நடிக்கிறார். இவர் நடிக்கும் மற்றொரு படத்தை வெற்றிமாறன் இயக்குவது பற்றி பேச்சு நடக்கிறது.
* ‘மலைக்கோட்டை’ படத்துக்கு பிறகு பூபதி பாண்டியன், விஷால் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது..
தனது அம்மா ஜ¦னத்தின் ஆசைப்படி அவரை மெக்காவிலுள¢ள கபாவுக்கு அழைத்து சென்றிருக்கிறார் ஆமிர் கான்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பில்லா 2Õ படத்தில் ஹெலிகாப்டர் சண்டை காட்சி அமைத்த ஸ்டீபன் ரிச்டர் மீண்டும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
நடன காட்சி அதிகமுள்ள படத்தில் நடிக்க ஆசைப்படவில்லை. நடனத்துடன் நல்ல கதை அம்சமுள்ள படமாக இருந்தால் நடிப்பேன்Õ என்று விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார் ஷோபனா.
வால்மீகி படத்தில் நடித்த மீரா நந்தன், வருடத்துக்கு ஒரு படமாவது தமிழில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.
கமல்ஹாசன் சொந்த குரலில் பாடிய பாடல்களை தொகுத்து ஒரே சிடியில் வெளியிட ரசிகர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.
Comments
Post a Comment