Tuesday,21st of August 2012
சென்னை::டாப்ஸி, தமன்னா சொந்த குரலில் டப்பிங் பேசியதை தொடர்ந்து நயன்தாராவும் முதல்முறையாக சொந்த குரலில் டப்பிங் பேச முடிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகும் படம் ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’. கிரிஸ் இயக்குகிறார். ராணா ஹீரோ. நயன்தாரா ஹீரோயின். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் நயன்தாரா, இதுவரை சொந்த குரலில் டப்பிங் பேசியதில்லை. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு அவரையே சொந்த குரலில் டப்பிங் பேசும்படி இயக்குனர் கேட்டார். அதை நயன்தாரா ஏற்றார். ‘ஆடுகளம்’ டாப்ஸி, தான் நடித்த ‘மிஸ்டர் பர்பெக்ட்’, ‘மொகுடு’ ஆகிய படங்களுக்கு டப்பிங் பேசினார். அதேபோல் ‘100 பர்சன்ட்’ என்ற படத்துக்கு தமன்னா டப்பிங் பேசினார். ஆனால் இதுவரை நயன்தாரா தான் நடித்த எந்த படத்துக்கும் சொந்த குரலில் டப்பிங் பேசியதில்லை. முதன்முறையாக இப்படத்தில் அந்த முயற்சியை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவாவுடனான பிரிவுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. ஏற்கனவே மேற்கொள்ளாத முயற்சிகளை ரீ-என்ட்ரியில் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

Comments
Post a Comment