என் பெயரில் இணையதள மோசடி!!!

Saturday,25th of August 2012
சென்னை::இணைய தளத்தில் என் பெயரில் மோசடி நடக்கிறது என்றார் சூர்யா. இது பற்றி அவர் கூறியதாவது: இணையதளங்களில் என் பெயரில் பலபேர் மோசடியாக டுவிட்டர், பேஸ் புக் பக்கங்களை ஏற்படுத்தி அதை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதையறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதில் சிலர் தொடர்ச்சியாக என்னைப்பற்றியும் எனது படங்கள் பற்றியும் தவறான தகவல் தந்துகொண்டிருக்கிறார்கள். அதுவும் நானே இதை தெரிவிப்பதுபோல் மோசடியாக குறிப்பிடுகிறார்கள். இது என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. என் பெயரில் இதுபோன்ற மோசடி செயல்களை தயவு செய்து யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட மோசடி பகுதியை ஒன்றரை லட்சம் ரசிகர்கள் பார்ப்பதாக அறிந்தேன். சமீபத்தில் இதுபோன்ற ஒரு பேஸ்புக் பகுதியில் 'மாற்றான்' படம் செப்டம்பர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது என நானே உறுதி செய்ததுபோல் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். படம் ரிலீஸ் பற்றி நான் எதையும் இதுவரை உறுதி செய்யவில்லை என்பதுதான் நிஜம். எனது ரசிகர்கள் யாரும் இந்த மோசடி இணையதள பகுதிகளை பார்த்து ஏமாற வேண்டாம்.

Comments