
சென்னை::செதுக்கி வைத்த சிற்பம் போல இருக்கும் அமலாபாலுக்கு, நாளுக்கு நாள், தன் அழகு மங்கி வருவதாக தோன்றவே, உடனே அமெரிக்காவுக்குப் பறந்து, அழகு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். கோடம்பாக்கம் ஏரியாவில் இப்போது, இதுதான் பரபரப்பு பேச்சு. "இது நிஜமா? என, அமலாபாலிடம் கேட்டதற்கு, "அமெரிக்க தமிழ் சங்கத்தின் வெள்ளிவிழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டேன். அப்படியே, குடும்பத்தினருடன் சேர்ந்து, ஊர் சுற்றினேன்; உறவினர்கள் வீடுகளுக்கும் சென்றேன். அங்குள்ள ஒரு அழகு நிலையத்துக்குப் போய், என் கெட்-அப்பையும், ஹேர் ஸ்டைலையும் மாற்றினேன். இதைத் தான், இந்த மாதிரி கொளுத்திப் போட்டிருப்பாங்களோ...? என, ஆச்சர்யப்பட்டார் அமலா பால்.
Comments
Post a Comment