டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு!!!

Tuesday,21st of August 2012
சென்னை::ர‌ஜினியின் எந்திரன் படத்தின் இசை வெளியீட்டை வெளிநாட்டில் நடத்தி புதிய ட்ரெண்டை அறிமுகப்படுத்தினர். மாற்றான் ஆடியோ வெளியீட்டு விழா சிங்கப்பூ‌ரில் சமீபத்தில் நடந்தது. அகோ‌ரி, சுடுகாடு என்று சுற்றிவரும் பாலாவின் பரதேசி ஆடியோ வெளியீட்டு விழா லண்டனில் நடக்கயிருக்கிறது. அப்படியானால் கோச்சடையான்...?

நியாயமாகப் பார்த்தால் நிலாவில்தான் விழாவை நடத்த வேண்டும். டெக்னால‌ஜி அந்தளவு முன்னேறாததால் டோக்கியோவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஜப்பானில் ர‌ஜினிக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு. முத்துப் படத்தில் ஆரம்பித்த இந்த ஊற்று இப்போது பொங்கிப் பிரவாகித்து ஜப்பானையே மூழ்கடிக்கும் அளவுக்கு பெருத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் கோச்சடையானை ஆங்கிலம், சைனா, பிரெஞ்ச், மற்றும் ஜப்பானிய சப் டைட்டிலுடன் உலகம் முழுக்க இறக்கிவிட இருக்கிறார்கள்.

இந்த உலகளாவிய மார்க்கெட்டை உலகுக்கு‌த் தெ‌ரியப்படுத்தும் விதமாக பாடல் வெளியீட்டு விழாவை டோக்கியோவில் நடத்த இசை உ‌ரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். டோக்கியோ மட்டுமின்றி உலகின் பல்வேற நாடுகளில் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.

ஜெயா டிவி-யில் கண்டிப்பாக ஒளிபரப்புவீர்கள்தானே?

Comments