Tuesday,28th of August 2012
சென்னை::நடிகர் ராணாவுடன் காதல், விரைவில் திருமணம் என வதந்தி பரவ காரணம் இருக்கிறது என்கிறார் த்ரிஷா. தெலுங்கு நடிகர் ராணா, த்ரிஷா நெருக்கமாக பழகி வருவதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக விழாக்கள், வெளிநாடு சுற்றுலா என ஜோடியாக செல்கின்றனர். இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என்றும் அப்போது த்ரிஷாவுக்கு ராணா, பிளாட்டினம் மோதிரம் அணிவித்ததுடன் நகைகள் பரிசளித்தார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து த்ரிஷா கூறியதாவது: ராணாவும், நானும் பல வருடங்களாக நண்பர்களாக பழகி வருகிறோம். அதை வைத்து எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்கிறோம் என்று எழுதுகிறார்கள். இதெல்லாமே உண்மைக்கு புறம்பானது. ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழகினால் அதில் என்ன தப்பு? அதை வைத்து காதலிப்பதாக கூறுவது சரியல்ல. தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். என்னை தேடி வரும் நல்ல படங்கள் எல்லாவற்றிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நானோ, எனது குடும்பத்தினரோ என்னுடைய திருமணம் பற்றி இன்னும் யோசிக்கக்கூட இல்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராணாவும் நானும் நண்பர்கள். இப்போதுதான் இருவரும் வெளிப்படையாக பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறோம். அதை வைத்துதான் இதுபோல் வதந்தி பரப்பப்படுகிறது. இவ்வாறு த்ரிஷா கூறினார்.

Comments
Post a Comment