Monday,27th of August 2012
சென்னை::வித்யாபாலனுக்கு வந்த வாய்ப்பு தற்போது நயன்தாராவுக்கு கைமாறிவிட்டது. பாலிவுட்டில் ‘தி டர்ட்டி பிக்சர்Õ படத்தில் கிளாமராக நடித்து பர
பரப்பை ஏற்படுத்தியவர் வித்யா பாலன். இவரை மலையாளத்தில் உருவாகவுள்ள ‘அறிவால் சுட்டிக்க நட்சத்திரம்Õ என்ற படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்தார் இயக்குனர் அமல் நீரத். மம்மூட்டி, பிருத்விராஜ் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ‘உருமிÕ படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிய சங்கர்
ராமகிருஷ்ணன், இப்படத்துக்கும் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார்.
இப்படத்தில் வித்யாபாலனுக்கு பதிலாக தற்போது நயன்தாராவை நடிக்க கேட்டிருக்கிறார் இயக்குனர். அவருக்கும் ஓகே சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட வித்யாபாலன், கால்ஷீட் தராமல் இழுத்தடித்தாராம். இதனால் அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றுள்ளது. 1960களில் நடக்கும் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது அரசியல் கதை இல்லை.
மேலும் இப்படத்தை 3டியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நயன்தாரா தனது திரையுலக பயணத்தை மலையாள படத்தின் மூலம்தான் தொடங்கினார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் மலையாள படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment