
சென்னை::மம்முட்டி, நதியா, டாப்ஸி ஆகியோரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாளப் படமான 'டபுள்ஸ்' படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'புதுவை மாநகரம்' என்ற பெயரில் வெளியாகிறது.
ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பாலா.ஆர் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்தை ஷோகன் இயக்கியிருக்கிறார். இதில் மம்முட்டி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருக்கிறார். நதியா மம்முடியின் சகோதரி வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு பாடலுக்கு நடிகை கிரண் நடனம் ஆடியிருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், சினேகன், பரிதி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
மம்முட்டியும், நதியாவும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். அவர்களது பெற்றோர் விபத்தில் பலியாகி விட, வளர்ந்த பிறகு இருவரும் சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் உயரிய தொண்டாற்றி வருகிறார்கள். அப்படியொரு விபத்தில் சிக்கும் டாப்ஸியை காப்பற்றுகிறார் மம்முட்டி. அதற்கு பிறகு ஏற்படும் பிரச்சனை என்ன என்பதுதான் படத்தின் கதை.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் செம்ப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
Comments
Post a Comment