வாள் சண்டையால் அவதிப்பட்டேன்: ஸ்ரேயா பேட்டி!!!

Wednesday,22nd of August 2012
சென்னை::படத்துக்காக வாள் சண்டை போட்டதால் கையில் வலி ஏற்பட்டு 2 நாள்கள் அவதிப்பட்டேன் என்றார் ஸ்ரேயா. தமிழ், கன்னடத்தில் உருவாகும் படம் சந்திரா. இதில் ராணி வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. கதைப்படி இப்படத்துக்காக களறி சண்டை காட்சியில் ஸ்ரேயா நடிக்க வேண்டும். இக்காட்சியை மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் படமாக்கினர். அப்போது எதிரி படையை சேர்ந்தவர்களுடன் ஸ்ரேயா வாள் சண்டை போட வேண்டும். ஸ்ரேயாவிடம் தரப்பட்ட வாள், அதிக கனமாக இருந்ததாம். கஷ்டப்பட்டு தூக்கி நடித்ததால் கையில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்ரேயா கூறியது: வாள் சண்டை போட்டு நடிக்க வேண்டும் என முதலில் இயக்குனர் சொன்னபோது சந்தோஷப்பட்டேன். முதல்முறையாக ஹீரோவை போல் சண்டை காட்சியில் நடிக்கப்போகிறேன் என பெருமையாக இருந¢தது. வாளை முதல்முறையாக கொடுத்தபோது கனமாக தெரியவில்லை. நீளமான ஒரு ஷாட்டில் நடிக்கும்போது கையில் வலி ஏற்பட்டது. வலியை பொறுத்துக்கொண்டு நடித்தேன். இடைவெளி விட்டு படமாக்கினாலும் பல மணி நேரம் அந்த சண்டை காட்சியை எடுத்தார்கள். மறுநாள் கையை தூக்க முடியாத அளவுக்கு கடும் வலி. 2 நாள் அந்த வலியால் அவதிப்பட்டேன். அந்த காலத்தில் ராஜாக்கள் எப்படி இதுபோல் வாள் சண்டை போட்டிருப்பார்கள்? ராணிக்கள் பலரும் இதுபோல் சண்டை போட்டிருக்கிறார்கள். அவர்கள் நிஜமாகவே கிரேட். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

Comments