
சென்னை::ஷூட்டிங்குக்கு திடீரென கட் அடித்த நயன்தாரா, கேரளா பறந்துவிட்டார். பிரபுதேவாவுடன் காதல் முறிந்ததும் சினிமாவில் முழு வீச்சில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. மீண்டும் நடிக்க வருவாரா என இண்டஸ்ட்ரி காத்திருந்தபோது, ரீ என்ட்ரி ஆனதால் நயன் கால்ஷீட் பெற தயாரிப்பாளர்கள் இடையே போட்டி ஏற்பட்டது. தமிழில் அஜீத் படம், ஃபாக்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்யா நடிக்கும் படம், தெலுங்கில் நாகார்ஜுனா, ராணா, கோபிசந்த் ஆகியோருடன் தலா ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். அஜீத்துடன் நடிக்கும் படத்துக்காக மும்பையில் ஷூட்டிங்கில் இருந்தவர் திடீரென 3 நாள் லீவு வேண்டும் என கேட்டிருக¢கிறார். பட ஷெட்யூல் மும்முரமாக நடப்பதால் லீவு கொடுக்க இயக்குனர் விஷ்ணுவர்தன் யோசித்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் ஷெட்யூலை மாற்றி லீவு கொடுத¢துவிட்டனர். உடனே சொந்த ஊரான கேரளாவுக்கு பறந்து வந்துவிட்டார் நயன். திடீரென அவர் ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுக்க என்ன காரணம் என யூனிட்டில் பரபரப்பு ஏற்பட்டது. விசாரித்தபோது, அவரது குடும்பத்தில் விழா ஒன்று நடப்பதாகவும் அதில் பங்கேற்கவே பிரேக் எடுத்ததாகவும் தெரிந்தது. இது குறித்து நயன்தாராவுக்கு நெருங்கிய வட¢டாரங்கள் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக ஓய்வு இல்லாமல் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். பெங்களூர், ஐதராபாத், மும்பை, சிம்லா என பயணத்திலே பல நாட்கள் கழிந்ததால் நயன்தாரா சோர்வடைந்துள்ளார். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதே நேரம், அவரது வீட¢டில் நடக்கும் விசேஷத்தில் பங்கேற்பதும் அவசியம். அதனால்தான் கேரளா வந்திருக்கிறார் என¢றன.
Comments
Post a Comment