
திருச்சி::திருச்சியில் நடந்த இறகு பந்து தர நிர்ணய போட்டியில் நடிகை ஷாலினி அஜீத் 2ம் இடம் பிடித்தார். பிரபல நடிகையும் நடிகர் அஜீத்தின் மனைவியுமான ஷாலினி, இறகு பந்து போட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இதற்காக பிரத்யேக பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இறகு பந்து போட்டியின் தரவரிசை நிர்ணயிக்கும் போட்டி திருச்சியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஷாலினி 2ம் இடம் பிடித்தார். மகளிர் இரட்டையர் போட்டியில் இவருடன் ஜோடியாக பிரியா களமிறங்கினார். இந்த ஜோடி, சுனைரா ஹரிணி ஜோடியுடன் இறுதிசுற்று வரை போராடி 2ம் இடத்தை பிடித்தது. கலப்பு இரட்டையர் போட்டியில் சுனைரா விஜய் ஜோடிக்கு எதிராக ஆடிய ஷாலினி பிரகாஷ் ஜோடி பரபரப்பாக ஆடியபோதும் முதல் இடத்தை இழந்து, 2ம் இடத்தை பெற்றது. இருப்பினும், தரவரிசை போட்டியில் முக்கிய இடம் பெற்ற ஷாலினி, நாகர்கோவிலில் இம்மாத இறுதியில் நடக்க உள்ள மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.
Comments
Post a Comment