Thursday,2nd of August 2012
சென்னை::ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான், காமிக்ஸ் புத்தகமாக வெளிவர உள்ளது. தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக படத்தின் பாடல் வெளியீட்டு விழா டோக்கியோவில் நடைபெறுகிறது. அப்போது ஜப்பானிலுள்ள ரஜினி ரசிகர்கள் திரளாக விழாவில் பங்கேற்க உள்ளனர். கோச்சடையானÕ மொபைல் போன்களும் விழாவில் வெளியிடப்பட உள்ளது. அடுத்த கட்டமாக படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் காமிக்ஸ் புத்தகத்தில் கோச்சடையான‘ பட கதையை வெளியிட உள்ளனர். முழு படமும் காமிக்ஸ் புத்தகமாக வெளியாக உள்ளது. பட ரிலீசுக்கு பின்பு இந்த புத்தகம் வெளியாகும். அதேபோல் கோச்சடையான¢ கேம் ஒன்றையும் உருவாக்க உள்ளனர். இதற்கு முன் பாலிவுட்டில் க்ரிஷ், ராஒன், கஜினி படங்களின் கேம் வெளியிட்டனர். தமிழில் முதல்முறையாக கோச்சடையான் கேம் வெளியிட உள்ளனர். இதில் ரஜினி உருவில் பொம்மை உருவாக்கப்பட்டு, வில்லன்களுடன் மோதுவது போன்ற கேம் வடிவமைக்கப்பட உள்ளது.
இது பற்றி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் கூறும்போது, முன்னணி கேம் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். சர்வதேச கேம் தயாரிப்பு நிறுவனங்களும் எங்களை தொடர்புகொண்டன. காமிக்ஸ் புத்தகம் தயாரிக்கும் பணி குறித்தும் சம்பந்தப்பட்ட சில நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

Comments
Post a Comment