ஆண்ட்ரியாவுக்கு லிப் டு லிப் கிஸ் : போட்டோ வெளியானதில் அனிருத் அதிர்ச்சி!!!

Saturday,18th of August 2012
சென்னை::ஆண்ட்ரியாவுக்கு முத்தம் தரும் போட்டோவை என் செல்போனில் இருந்து யாரோ திருடி வெளியிட்டிருக்கிறார்கள்’ என்று அனிருத் அதிர்ச்சி தெரிவித்தார். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஆண்ட்ரியாவும், ‘3’ பட இசை அமைப்பாளர் அனிருத்தும் ‘லிப் டு லிப்’ கிஸ் அடிக்கும் போட்டோ இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதையறிந்து ஷாக் ஆனார் அனிரூத். அவர் கூறியதாவது: ஆண்ட்ரியாவுடன் நான் முத்தமிடும் போட்டோக்கள் இணைய தளத்தில் வெளியானது என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது ஒரு வருடத்துக்கு முந்தைய படம். இப்போது ஆண்ட்ரியாவுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. எங்களுக்குள் இருந்த உறவு முறிந்துவிட்டது. எனது செல்போனில் இந்த போட்டோவை வைத்திருந்தேன். சமர்த்தியமாக யாரோ அதை திருடி இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். என்னுடைய இமேஜை நான் இப்படி வளர்க்க விரும்பவில்லை. எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதை வெளிப்படையாக விவாதிக்க விரும்பவில்லை. அது எனக்கு வேதனையாக இருக்கிறது. எனது பெற்றோர் என்னை நல்லமுறையில் வளர்த்திருக்கிறார்கள். ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ய மாட்டேன். மற்றவர்கள் எண்ணுவதுபோல் ஒரு பெண்ணை முத்தமிட்டு அதை போட்டோ எடுத்துக்கொள்ளும் குணம் படைத்தவன் அல்ல. என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது. எனக்கு வேலைதான் முக்கியம். ஆண்ட்ரியாவுடனான உறவில் இருந்து நான் எப்போதோ விலகிவிட்டேன். எனது பழைய சம்பவங்கள் எனது எதிர்கால திட்டங்களை பாதிக்காது. இவ்வாறு அனிருத் கூறினார்.

Comments