பணம் சம்பாதிப்பதற்காகதான் சினிமாவுக்கு வந்தேன் காதலிக்க அல்ல" லட்சுமி ராய்!!!

Friday, August 17, 2012
சென்னை::பணம் சம்பாதிப்பதற்காகவும், பேர் வாங்கவும்தான் சினிமாவுக்கு வந்தேன். காதலிப்பதற்காக அல்ல. என்று நடிகை லட்சுமி ராய் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது கதாநாயகியாக நடித்து வரும் லட்சுமி ராய், விகரம் நடிக்கும் 'தாண்டவம்' படத்திலும் மூன்றாவது நாயகியாக நடித்திருக்கிறார். இரண்டு நாயகிகள் நடித்த போதும் தாண்வம் படத்தில் நடித்தது ஏன்? என்பது பற்றி கூறிய லட்சுமி ராய், "எனக்கு தாண்டவம் படத்தின் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது அதனால் தான் அதில் நடிக்க சம்மதித்தேன். நல்ல படம் எதுவாக இருந்தாலும் அதில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதில் பிளஸ், மைனஸ் பார்ப்பதில்லை. என்னால் முடிந்த அளவு உழைக்கிறேன். அதன்பிறகு என்ன வருகிறதோ அதை ஏற்றுக் கொள்கிறேன்.

பணம் சம்பாதிக்கவும், பேர் வாங்கவும் தான் சினிமாவுக்கு வந்தேன். நண்பர்க்ளை உருவாக்கி கொள்வதற்காகவும், காதலிப்பதற்காகவும் அல்ல. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. காதல் செய்வதற்கு நேரமும் இல்லை." என்றார்.

Comments