Friday, August 17, 2012
சென்னை::கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கும் மனிஷா கொய்ராலா பிறந்த நாள் பார்ட்டியை ரத்து செய்தார். ‘இந்தியன்’, ‘முதல்வன்’ ‘குசேலன்’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இவர் 2 ஆண்டுக்கு முன்பு நேபாள நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களிலேயே இவர்களுக்குள் மனக் கசப்பு ஏற்பட்டது. கணவரை விவாகரத்து செய்யப்போவதாக தனது இணையதள பக்கத்தில் அறிவித்த மனிஷா கொய்ராலா திடீரென்று அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார். ஆனாலும் இவர்களின் உறவில் விரிசல் நீடிக்கிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்யப்போவதாக மனிஷா கூறினார். இது பாலிவுட் சினிமா இதழ்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் மனிஷாவுக்கு 42வது வயது பிறந்தது. இதை தோழிகள் நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்தார். தபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட நெருக்கமான நட்சத்திரங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். திடீரென்று அந்த பார்ட்டியை ரத்து செய்துவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது,‘எனது நெருங்கிய நண்பரும், தொழில் பங்குதாரரும், இயக்குனருமான அசோக் மேத்தா கடந்த 15ம் தேதி இறந்துவிட்டார். அது என் மனதை பெரிதும் பாதித்திருக்கிறது. எனக்கு காட்பாதராக இருந்த அவரது மறைவை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து பிறந்த நாள் பார்ட்டியை ரத்து செய்துவிட்டேன்’ என்றார்.

Comments
Post a Comment