சிம்பு, தனுஷ் குழப்பத்தால் வெற்றிமாறன் புது முடிவு!!!

Friday,31st of August 2012
சென்னை::சிம்பு, தனுஷ் படம் இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டதால் இயக்குனர் வெற்றிமாறன் புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார்.‘ஆடுகளம் படத்தையடுத்து தனுஷ் நடிக்கும் மற்றொரு படத்தை இயக்கப்போவதாக வெற்றி மாறன் கூறி வந்தார். இந்நிலையில் அந்த திட்டத்தை காத்திருப்பில் வைத்துவிட்டு சிம்பு நடிக்கும் ‘வட சென்னைÕ படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். தற்போது இந்த படம் இயக்குவதையும் கைவிட யோசித்திருக்கிறார். தனது படத்தைதான் முதலில் இயக்க வேண்டும் என்று சிம்பு, தனுஷ் இருவருமே வெற்றிமாறனிடம் கேட்பதால் எதை இயக்குவது என்று முடிவெடுக்க முடியாமல் அவர் குழப்பத்தில் இருந்தார். இப்போது புது முடிவு எடுத்துள்ளார். அதன்படி சித்தார்த் நடிக்க ‘நான் ராஜாவாகப் போகிறேன் என்ற சொந்த படத்தை தயாரிக்கும் பணியில் மட்டும் மூழ்கி இருக்கிறார் வெற்றி மாறன். இப்படத்திற்கு அவரே வசனம் எழுதுகிறார். இது பற்றி அவர் கூறும்போது, சொந்த படம் தயாரிப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டுவிட்டேன். எனவே அடுத்த படம் இயக்குவது பற்றி எந்த எண்ணமும் இப்போது இல்லை. இப்பட வேலைகள் முடிந்த பிறகு இரண்டு படங்கள் இயக்குவதற்கான முயற்சியில் இருக்கிறேன். இதில் யார் ஹீரோ என்பது பற்றி இன்னும் உறுதி செய்யவில்லை என்றார்.

Comments