ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கப் போகும் திரிஷா!!!

Friday,31st of August 2012
சென்னை::நடிப்பதை முழுநேர தொழிலாக செய்துவந்தாலும் அதனுடன் துணிக்கடை, நகைகக்டை, அலங்காரப் பொருட்கள், ரியல் எஸ்டேட் பிசினஸ் என்று டிகைகள் பிற தொழிலிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் நமீதா ஏற்கனவே மும்பையில் தனது நண்பருடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கிவிட்டார். நடிகை சோனாவும் அலங்காரப் பொருட்கள் மற்றும் பர்னிச்சர் விற்பனை மையத்தை தொடங்கிவிட்டார். இந்த வரிசையில் தற்போது நடிகை திரிஷாவும் இடம் பிடிக்கப்போகிறார்.

சென்னையை அடுத்துள்ள பகுதியில் திரிஷா, ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறாராம். திருமணத்திற்குப் பிறகு அந்த நிலங்களை வைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக இறங்கவும் முடிவு செய்திருக்கிறாராம். ஏற்கனவே தனது அப்பாவுக்காக ஆந்திராவில் ஹோட்டல் ஒன்றை திரிஷா கட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments