Friday,31st of August 2012
சென்னை::மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பழைய நடிகர் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கிறார். பழைய நடிகை ராதா மகள் துளசி நாயகியாக நடிக்கிறார்.அர்ஜுன், அரவிந்தசாமி போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் அர்ஜுன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகினர். மணிரத்னம் படம் என்பதால் அவர் சம்மதிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தீவிர ஆலோசனைக்கு பிறகு நயன்தாரா மறுத்து விட்டார்.
கடல் படத்தில் அர்ஜுன் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. அத்துடன் நயன்தாரா, அஜீத் போன்ற பெரிய ஹீரோக்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மணிரத்னம் படத்தில் குணசித்திர வேடத்தில் தோன்றினால் தனது மார்க்கெட் பாதிக்கும் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது. குணசித்திர நடிகையாக என்னை இறக்கி விடுவார்கள் என அவர் பயப்படுகிறார். எனவேதான் மணிரத்னம் படத்தை உதறியதாக கூறப்படுகிறது. எனவே நயன்தாராவுக்கு பதில் வேறு நடிகை தேடுகின்றனர்.

Comments
Post a Comment