
சென்னை::ஸ்ரேயா நடித்துள்ள மிட்நைட்ஸ் சில்ட்ரன் ஆங்கில படத்தை இந்தியாவில் வெளியிட வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை என நடிகை ஷாஹானா கோஸ்வாமி தெரிவித்தார். தீபா மேத்தா இயக்கத்தில் சித்தார்த், ஷபானா ஆஸ்மி, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மிட்நைட்ஸ் சில்ட்ரன். சல்மான் ருஷ்டி எழுதிய நாவலை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ள ஷாஹானா கோஸ்வாமி கூறியதாவது: இந்த படத்தின் சிறப்பு காட்சி டொரான்டோவில் திரையிடப்பட உள்ளது. தொடர்ந்து அமெரிக்கா, கனடாவில் படம் ரிலீசாகும். இதையடுத்து பிரேசில், சீனாவிலும் படம் வெளியாக உள்ளது. துரதிருஷ்டவசமாக இந்தியாவில் இப்படத்தை வாங்க ஆளில்லை. இந்த படத்தை வெளியிட எந்த வினியோகஸ்தரும் ஆர்வம் காட்டவில்லை. பலரிடம் பட தயாரிப்பாளர்கள் பேசியும் வினியோகஸ்தர்கள் யாரும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், சர்ச்சையான படமாக இதை பார்ப்பதுதான். இது வருத்தமான விஷயம். இந்த படத்தில் கதைப்படி எனக்கு 2 கணவன்கள். ஷபானா ஆஸ்மி எனது அம்மாவாக நடிக்கிறார். இந்தியா,பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இவ்வாறு ஷாஹானா தெரிவித்தார்.
Comments
Post a Comment