டி.வி.யில் ஒளிபரப்ப அஜீத்தின் பில்லா 2 படத்துக்கு தடை: தணிக்கை குழு நடவடிக்கை!!!

Tuesday,28th of August 2012
சென்னை::திரைப்படங்களை டெலிவிஷன்களில் ஒளிபரப்ப மத்திய தணிக்கை குழு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 'ஏ' சர்டிபிகேட் உள்ள படங்களை டி.வி.யில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அஜீத்தின் 'பில்லா-2' படம் 'ஏ' சர்டிபிகேட் பெற்ற படம் ஆகும். எனவே தணிக்கை குழு நடவடிக்கையால் பில்லா-2 படத்தை டி.வி.யில் ஒளிபரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான 'த டர்டி பிக்சர்' இந்தி படத்தையும் டி.வி.யில் ஒளிபரப்ப ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது. தணிக்கை குழுவின் புதிய விதிமுறைகளால் திரையுலகினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

திரைப்படத்துறையினருக்கு டி.வி. உரிமை மூலம் பெருந்தொகை கிடைக்கிறது. இனிமேல் 'ஏ' சர்டிபிகேட் படங்களை டெலிவிஷன் சேனல்கள் வாங்க மறுத்து விடும். இதனால் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே 'ஏ' இல்லாத அளவுக்கு படங்களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இயக்குனர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே பல 'ஏ' படங்களை டி.வி. நிர்வாகத்தினர் வாங்கி வைத்துள்ளனர். அவைகளை ஒளிபரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, இந்தப் படங்களுக்கு 20 சதவீத வருவாய் டி.வி. உரிமை மூலம் கிடைக்கிறது.

அமீர்கானின் டெல்லி பெல்லி, மற்றும் கேங்ஸ் ஆப் வசேபூர் படங்கள் 'ஏ' சான்றிதழ் பெற்றவை அவற்றை ஒளிபரப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.

Comments