
சென்னை::அஜீத் நடித்த 'பில்லா-2' படத்தில் நடித்த பிரேசில் மாடலான ப்ரூனா அப்துல்லாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
பிரேசில் நாட்டு விளம்பர மாடலான ப்ரூனா அப்துல்லா, 'பில்லா-2' படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடித்தார். மிகவும் கவர்ச்சியாக பில்லா-2 படத்தில் நடித்த இவர் சில இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கும் வங்காள இளைஞர் ஒருவருக்கும் காதல் என்று செய்தி பரவியது. மேலும் 3 ஆண்டுகளாக அந்த இளைஞரை ப்ரூனா காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது சொந்த நாடான பிரேசிலுக்கு தனது குடும்பத்தாருடன் சென்ற ப்ரூனா, கூடவே தனது காதலரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இதுபற்றி கருத்து கூற மறுத்து வந்த ப்ரூனா, தற்போது தனக்கும், வங்காள இளைஞருக்கும் காதல் இருப்பது உண்மை தான் என்றும் எங்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
விரைவில் ப்ரூனா, தனது காதலரை திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம். அதற்கான ஏற்பாடுகளும் நடக்கிறதாம்.
Comments
Post a Comment