Sunday,26th of August 2012சென்னை::சூர்யா நடிக்கும் மாற்றான் படம் வரும் அக்டோபர் 12-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா இதுவரை நடித்ததில் பெரிய பட்ஜெட், பெரிய வியாபாரம் ஆகியிருக்கும் படம் என்றால் அது மாற்றான்தான்.
ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா நடிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.
பாடல் காட்சிகள் நார்வே நாட்டில் இதுவரை யாரும் படமாக்காத அழகிய பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தின் பாடல்களை சமீபத்தில் சிங்கப்பூரில் பிரமாண்டமாக வெளியிட்டனர். இப்போது பட வெளியீட்டுத் தேதியை ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 12-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே இந்தப் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment