ஜெயம் ரவிக்கு வில்லனாகும் wrestling வீரர் ‘ஜான் சீனா!!!

Tuesday,24th of July 2012
சென்னை::தற்போது தமிழ் சினிமாவில் வெளிநாட்டு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. அவர்களுக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கிறது.

சூர்யா நடித்த ‘7-ஆம் அறிவு’ படத்தில் நடித்த வியட்நாம் நாட்டைச் சேர்ந்த டோங்லியின் நடிப்பை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறக்கமுடியாது. அதேபோல், ‘மதராசப்பட்டணம்’ படத்தில் அறிமுகமான எமி ஜாக்சன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இருப்பினும் தமிழ் ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டு தமிழில் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இதேபோல், பல சூப்பர் ஹீரோ படங்களிலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து நடிகர்கள் இறக்குமதி செய்யப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயம் ரவியை வைத்து இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் ‘பூலோகம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக பிரபல (wrestling) வீரர்களான ஜான் சீனா மற்றும் ஸ்டோன் கோல்டு ஆகிய இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜான் சீனா, ஸ்டோன் கோல்டு இருவரும் (wrestling) மூலம் பிரபலமானவர்கள். இவர்களுக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இதனால் கட்டாயம் இவர்களுக்கு இந்திய சினிமாவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பூலோகம்’ படம் ஒரு காதல் படம். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Comments