
சென்னை::சினேகாவும், பிரசன்னாவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் சினேகா விடியல், ஹரிதாஸ் படங்களில் நடித்து வருகிறார்.
இவை திருமணத்துக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்ததும் சினேகா தொடர்ந்து நடிப்பாரா? அல்லது சினிமாவுக்கு முழுக்கு போடுவாரா? என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்குனர் 'பிரியாணி' படத்தில் சினேகா, பிரசன்னா இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.ரிச்சா நாயகியாக நடிக்கிறார்.
வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரனும் முக்கிய கேரக்டரில் வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்துக்கு பின் சினேகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என தெரிகிறது.
Comments
Post a Comment