ஓவர் கிளாமரை எதிர்பார்க்கிறார்கள் : பூமிகா தாக்கு!!!

Saturday,7th of July 2012
சென்னை::ஓவர் கிளாமர், இரட்டை அர்த்த வசனங்களில் நடிக்க வேண்டும் என்றுதான் ஹீரோயினிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றார் பூமிகா. திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார் பூமிகா. அவர் கூறியதாவது: வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் தென்னிந்திய உணவான இட்லிதான் விரும்பி சாப்பிடுகிறேன். இதனால் என் குடும்பத்தினரும், நண்பர்களும் நான் பஞ்சாபியாக இல்லை என்று கூறுகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். நிறைய பட வாய்ப்பு வந்தாலும் ‘ஏப்ரல் ஃபூல்Õ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். மலையாள படங்களிலும் நடிக்க வாய்ப்பு வருகிறது. என்னைப் பொறுத்தவரை அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. நடிப்பது சில படங்களாக இருந்தாலும் அது பேர் சொல்லும் வேடமாக இருக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். கதைகள் பெரும்பாலும் ஹீரோக்களை மையமாக வைத்தே உருவாகிறது. எதிர்பாராதவிதமாக சமீபகாலமாக ஹீரோயின் என்றதும் அவரிடம் ஓவர் கிளாமரையும். இரட்டை அர்த்த வசனங்கள் பேச வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். கிளாமர் என்ற வார்த்தையை கேட்டதும் உடனே ஹீரோயின் நீச்சல் உடையில் நிற்பதுதான் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஹீரோக்கள் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் நடித்து வருகிறார்கள்.

Comments