Saturday,7th of July 2012
சென்னை::விஜய் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவில்லை என்றார் கவுதம் மேனன். கவுதம் மேனன் இயக்கவுள்ள படம் ‘யோவான் அத்தியாயம் ஒன்றுÕ. விஜய் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது குறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் கேட்டபோது, ‘ஸ்ருதி ஹாசனிடம் இதுபற்றி எதுவும் பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் ஹீரோயின் யார் என்பதுபற்றி யோசிக்ககூட இல்லை. இப்படத்துக்காக இன்னும் பல நடிகர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன். இப்படத்துக்கு ஒல்லியாக வேண்டும் என்று விஜய்யிடம் கூறி இருக்கிறேன். யோவான் தமிழுக்கு முற்றிலும் புதிய ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் பெர்லினில் நடக்க உள்ளது. இதுதவிர பல்வேறு நாடுகளில் படமாக உள்ளது. ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் நடிக்க உள்ளனர். இவ்வாறு கவுதம் மேனன் கூறினார். விஜய்யுடன் நடிக்கிறீர்களா என்று ஸ்ருதியிடம் கேட்டபோது, ‘அது உண்மை இல்லை. யோவான் படத்தில் நடிப்பதுபற்றி இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை. இப்போதுள்ள நிலையில் நான் கைநிறைய படங்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

Comments
Post a Comment