குடும்பத்தோடு பிறந்தநாள் தினத்தை கொண்டாடிய சூர்யா:நண்பர்களிடம் பழகுவதை நிறுத்திவிட்டேன் : சூர்யா!!!

Tuesday,24th of July 2012
சென்னை::தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக திகழும் சூர்யாவுக்கு நேற்று (ஜூலை 23) பிறந்தநாள். மாற்றான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த சூர்யா தனது பிறந்தாளை முன்னிட்டு படப்பிடிப்பிற்கு தற்காலிக விடுமுறை கொடுத்திவிட்டு தனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரோடு பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சூர்யா பிறந்தநாளையொட்டி அவருடைய ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். தேனாம்பேட்டை பகுதியில் ரத்ததான முகாம் நடந்தது. அதேபோன்று திருவான்மியூர் பகுதியிலும் 100 பேர் ரத்ததானம் செய்தார்கள். மேலும் ஏழைகளுக்கு அன்னதானமும் போடப்பட்டது.

தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து சூர்யா கூறுகையில், "கடந்த ஆண்டில் இருந்து 'மாற்றான்' படப்பிடிப்பில் பிஸியாக இருந்தேன். வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூட நேரமில்லை. குடும்பத்தையும் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன். அதனால் பிறந்தநாளையொட்டி இன்று முழுவதும் அவர்களுடன் இருப்பேன். இந்த நாலை என்னைவிட ஆர்வத்துடனும், அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடி வரும் என் ரசிகர்களுக்கு எனது அன்பும் நன்றிகளும்." என்றார்...

மனைவி குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக நண்பர்களுடன் பழகுவதை நிறுத்திவிட்டேன் என்றார் சூர்யா. நேற்று பிறந்த நாள் கொண்டாடும் சூர்யா, கூறியதாவது: மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் வேடத்தில் நடிக்கிறேன். தொடர்ந்து படப்பிடிப்பில் இருப்பதால் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. என்னுடைய வேலையை பொறுத்தவரை முழுநேரமும் நான் செலவிட வேண்டி இருப்பதை உணர்கிறேன். அதேநேரம் நான் பொறுப்பான தந்தையாகவும் இருக்க விரும்புகிறேன். ஷூட்டிங்கில் இடைவெளி கிடைத்தால் உடனே ஜோ, தியா, தேவ் (ஜோதிகா மற்றும் பிள்ளைகள்) ஆகியோருடன் நேரம் செலவழிப்பேன்.

நான் எனது நண்பர்களுடன் எங்கும் வெளியில் செல்வதில்லை. சொல்லப்போனால் அவர்களுடன் போனில்கூட பேசுவதில்லை. உடற்பயிற்சி செய்வதென்றால்கூட என் குழந்தைகள் விழிப்பதற்கு முன்பே செய்து முடித்துவிடுவேன். அவர்கள் எழுந்ததும் அவர்களுடனேயே இருப்பேன். அவர்களுக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறேன். பள்ளி யுனிபார்ம் அணிவிப்பது, சாப்பாடு ஊட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது என ஜோவுக்கு உதவியாக இருந்து செய்வேன்.

Comments