கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Friday, 13th of July 2012
சென்னை::சித்திரம் பேசுதடி படத்தில் நரேனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய மிஷ்கின், தனது முகமூடி படத்தில் வில்லனாக நடிக்க வைக்கிறார். நெருங்கிய நண்பரான நரேனை தொடர்ந்து படங்களில் பயன்படுத்திக்கொள்வாராம் மிஷ்கின்.

பிடிச்சிருக்கு படத்தில் நடித்த விஷாகா, இந்தியில் அனுராக் காஷ்யப் தயாரிக்கும் நகைச்சுவை படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

தாமிரபரணி படங்களுக்கு பிறகு ஒன்றிரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்த பானு மீண்டும் சிவாஜி தேவ் ஜோடியாக புதுமுகங்கள் தேவை படத்தில் நடிக்கிறார்.

ஒலிம்பிக் போட்டியை நேரில் காண லண்டன் செல்லும் மோகன்லால் அங்கிருந்து திரும்பியதும் சென்னையில் குடியேற திட்டமிட்டிருக்கிறார்.

பிரியாமணி நடிக்கும் சாருலதா கன்னட படத்தில் டுவின்ஸாக நடிக்கும் பிரியாமணி இதன் ஒரிஜினல் படமான தாய்லாந்து படத்தில் நடித்த நடிகையின் நடிப்பை பலமுறை பார்த்தார். பின்னர் தனது பாணியில் நடிக்க தினமும் வீட்டில் பயிற்சி செய்கிறார்.

3 படம் 100 நாட்களை தொட்டிருக்கிறது. இதற்கு அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து நடித்த என் கணவர் தனுஷுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா.

விக்ரம் நடிக்கும் தாண்டவம் பட ஷூட்டிங் முடிந்ததையடுத்து பட குழுவினருக்கு விருந்தளித்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன்...

மோகன்லால் நடிக்க மேஜர் ரவி இயக்கும் ‘கர்மயுத்தாÕ படத்தில் வில்லன¢ வேடத்துக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட்டிடம் பேச்சு நடக்கிறது.

சூர்யா நடிக்க ஹரி இயக்கும் ‘சிங்கம் 2Õ விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதில் நடிப்பதற்காக 1000 துணை நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் ஹரி.

சூரிய கதிர்வீச்சால் தோலில் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சை முடிந்தது. விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார் சமந்தா.

ராஜபாட்டை தீக்ஷா சேத் அடுத்து மனோஜ் மன்சு, பிரபாஸுடன் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கிறார். சிலநாட்களுக்கு முன் இவர் தோழிகளுடன் இமாச்சல பிரதேசம் சென்று மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டாராம்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற எமி ஜாக்ஸன் அங்கு நடந்த இளம்பெண்கள் ஆடை அணிவகுப்பு போட்டிக்கு நடுவராக இருந்தார்.

Comments