Monday,9th of July 2012
சென்னை::பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் நடித்துள்ள 2 படங்கள் ரீமேக் ஆகிறது. ரஜினி நடித்த படம் ‘தில்லு முல்லுÕ. கமல் நடித்த படம் ‘மன்மத லீலை. இந்த இரண்டு படங்களையும் ரீமேக் செய்கிறார் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி. இதுபற்றி அவர் கூறும்போது, ‘கமல் நடித்த மன்மத லீலை, ரஜினி நடித்த தில்லு முல்லு இரண்டும் ஹிட் படங்கள். அந்த காலகட்டத்தில் இரண்டும் டிரெண்ட் செட் படங்களாக அமைந்தன. இப்படங்களை ரீமேக் செய்ய உள்ளேன். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இரண்டு படங்களின் கதை கருவும் எந்த காலகட்டத்துக்கும் பொருந்தும். அதன் கருவை மட்டும் வைத்துக்கொண்டு புதிய காட்சிகளுடன் இப்படம் உருவாகும். இப்படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டகார நடிகர்கள் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. பிரபல இயக்குனர்களிடம் படத்தை இயக்குவதுபற்றி பேச்சு நடக்கிறதுÕÕ என்றார். ஹீரோ கமல் அழகான பெண்களை பார்த்ததும் சபலம் அடையும் குணம் கொண்டவர். பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்ட நஷ்டங்களை கூறும் கதைதான் மன்மத லீலை. இந்தியில் வெளியான கோல் மால் படமே தில்லு முல்லு என்ற பெயரில் உருவானது. தொழில் அதிபர் ஒருவரின் அன்பை சம்பாதிக்கும் ஹீரோ ரஜினி ஒரு கட்டத்தில் அவரிடமே பொய¢ சொல்லி நடிக்கும் நிலை உருவாகிறது. இதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது கதை.

Comments
Post a Comment