
சென்னை::விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கும் மதகஜராஜா படத்தின் ஹீரோயின் பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்தப் படத்தில் கார்த்திகா நடிக்க ஒப்புக் கொண்டதும், சுந்தர் சி. ஸ்கிரிப்டை மாற்றி விஷாலுக்கு இரண்டு ஜோடிகள் என்றதும் கார்த்திகா படத்திலிருந்து எகிறியதும் சரித்திர சம்பவங்கள். அது தேவையில்லை. அடுத்து வரலட்சுமியை ஒப்பந்தம் செய்தனர். அவர் கார்த்திகா ஒப்புக் கொண்டிருந்த மெயின் ரோலுக்கு. இரண்டாவது ஹீரோயினாக தாப்ஸியை கமிட் செய்தனர். காரணம் சொல்லாமல் அவரும் கார்த்திகாவைப் போல எகிற மீண்டும் வெற்றிடம்.
இப்போது அஞ்சலி அந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார். கலகலப்பு என்ற ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததாலும், கலகலப்பு இரண்டாவது பாகத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக வாக்கு தந்ததாலும் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க முன் வந்திருக்கிறார் அஞ்சலி.
Comments
Post a Comment