இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்று கூறி, தமிழ் ரசிகர்கள் மனதில் கல்லைப் போட்டிருக்கிறார் சின்ன குஷ்புவான ஹன்ஸிகா!!!

Saturday,7th of July 2012
சென்னை::இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்று கூறி, தமிழ் ரசிகர்கள் மனதில் கல்லைப் போட்டிருக்கிறார் சின்ன குஷ்புவான ஹன்ஸிகா.

ஏனம்மணி இந்த முடிவு?

அடிப்படையில் நான் கவர்ச்சி நடிகை இல்லை. நான் நடித்த அனைத்துப் படங்களுமே குடும்பப் பாங்கானவை. அனைவரும் பார்த்து ரசிக்கும்படியாக இருந்தன.

பாடல் காட்சிகளில் மட்டும் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடித்திருந்தேன். ஆனால் இனி நல்ல டீஸன்டான உடைகளில் மட்டுமே தோன்றப் போகிறேன்," என்கிறார் ஹன்ஸிகா.

இவர் நடிக்கும் சேட்டை படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியதற்கு, மறுப்பு தெரிவித்துவிட்டாராம் ஹன்சிகா.

ஹன்ஸிகாவின் இந்த முடிவுக்கு இன்னொரு காரணம், ஒரு கல் ஒரு கண்ணாடியில் இவரது குடும்பப் பாங்குக்கு கிடைத்த வரவேற்புதானாம்.

ஆனால் ஹன்ஸிகாவின் முடிவு அவருக்கு மட்டும்தான் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. இயக்குநர்களோ மகா எரிச்சலில் உள்ளார்களாம்.

Comments