
சென்னை::வேட்டை படத்தில் நடித்து வந்த சமயம், நானும் அசின் மாதிரி இந்தி சினிமாவிலும் கொடி நாட்டப் போகிறேன் என, முயற்சி எடுத்தார் அமலா பால். ஆனால், அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் தள்ளாட்டம் கண்டது. இதனால் தடுமாறிப் போன அமலா, தற்போது இந்தி ஆசையை ஓரங்கட்டிவிட்டு, தென் மாநில சினிமாவில் தன் மார்க்கெட்டை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அமலாபாலைக் கேட்ட போது, "தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, "நிமிர்ந்து நில் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளேன். இதுதவிர, தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படமும்; மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன். தற்காலிகமாக இந்திப்பட முயற்சியை தள்ளி வைத்துள்ளேன் என்கிறார்.
Comments
Post a Comment