
மும்பை::சல்மான் கானும் கத்ரினா கைப்பும் ‘ஏக் தா டைகர்’ என்ற இந்தி படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இருவரும் சில வருடங்களுக்கு முன் காதலர்களாக இருந்தவர்கள் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பின் ‘ஏக் தா டைகர்’ படம் மூலம் இருவரும் சேர்ந்துள்ளார்கள். இதன் படிப்பிடிப்பு வட இந்தியாவில் பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அப்போது ஒரு காட்சியில் கத்ரினா கைப் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியாக வந்தார். இதை பார்த்த சல்மான்கான் ஆத்திரமாகி கத்ரினாவை அடித்து உதைத்ததாக மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
வேனில் இருந்து நடிப்பதற்காக கத்ரினா இறங்கி வந்தார். அப்போது அவர் உடுத்தி இருந்த ஆடை உடம்போடு ஒட்டி இருந்தது. உடலின் பல பகுதிகள் வெளியே தெரிந்தன. சூட்டிங்கில் திரண்டு நின்றவர்கள் அவரை விழுங்குவது போல் பார்த்தனர்.
இது சல்மான்கானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இப்படி ஏன் அரைகுறை ஆடை உடுத்தியிருந்தாய் என்று கத்ரினாவிடம் கோபத்தோடு கேட்டார். அதற்கு அவர் இயக்குனர் சொன்னதால் அணிந்தேன் என்று சர்வ சாதாரணமாக பதில் அளித்தார்.
இதனால் கோபமான சல்மான்கான் இயக்குனரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். அத்துடன் கத்ரினா கைப்பையும் அடித்து உதைத்தார். மும்பை பட உலகம் முழுவதும் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி, எல்லோரும் இதுபற்றி பேசுகிறார்கள்.
ஆனால் இந்த செய்தியை கத்ரினா தரப்பில் அவரது உதவியாளர் மறுத்துள்ளார். இருவரும் ஏற்கனவே பிரிந்து விட்டாலும் தற்போது எந்த மனக்கசப்பும் இன்றி நடித்து வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றார்.
Comments
Post a Comment