நீச்சல் டிரஸ் உடல் அமைப்பு தமிழ் நடிகைகளுக்கு இல்லை : தீபிகா தடாலடி!!!

Friday, 13th of July 2012
சென்னை::தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் உள்ளிட்ட யாருக்கும் நீச்சல் உடை அணிவதற்கான உடலமைப்பு இல்லை என்றார் தீபிகா. இதுபற்றி தீபிகா படுகோன் கூறியது:
காக்டெய்ல் என்ற பாலிவுட் படத்தில் நீச்சல் உடை அணிந்து நடிக்கிறேன். இயற்கையான தோற்றத்துடன் இருப்பதையே விரும்புகிறேன். தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய நடிகைகளின் உடலமைப்பு இயற்கையாகவே நீச்சல் உடை அணிவதற்கு ஏற்றது கிடையாது. அதற்கான உடலமைப்பு வேண்டுமென்றால் அதிகமாகவே கடின உழைப்பு மேற்கொள்ள வேண்டும். காக்டெய்ல் படத்தில் நீச்சல் உடையில் நடிப்பதற்காக நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். வழக்கமான உடற்பயிற்சியை சற்று மாற்றி செய்ய வேண்டி இருந்தது. வெளியில் சென்று இரவு விருந்து சாப்பிடுவதையும் இதற்காக தியாகம் செய்ய வேண்டி இருந்தது. தயாரிப்பாளர் தினேஷ்விஜயன் ஷூட்டிங்கிலிருந்து அடிக்கடி இரவு சாப்பாட்டுக்கு அழைத்து செல்வார். நீச்சல் உடை அணியும் காட்சி படமாக்கும் நாள் நெருங்கும்போது வெளியில் செல்வதை நிறுத்திவிட்டு அறைக்குள்ளேயே உட்கார்ந்துவிடுவேன். ஐஸ்கிரீம் உள்ளிட்ட இனிப்பு விஷயங்களை மறந்து அவிக்கப்பட்ட மீன் மட்டுமே சாப்பிட்டேன். சரியான தோற்றம் வந்ததும் நீச்சல் உடை அணிந்து நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் எல்லா கட்டுப்பாட்டையும் ஒதுக்கிவிட்டேன். ஷூட்டிங் முடிந்த நாளில் இருந்தே பிடித்த உணவு வகைகளை சாப்பிட தொடங்கிவிட்டேன். தயாரிப்பாளர் தினேஷ் ஓட்டலுக்கு அழைத்து சென்று ருசியான உணவு, பிடித்த சாக்லெட் ஐஸ்கிரீம்களை ஆர்டர் செய்து கொடுத்தார்.

Comments