
சென்னை::இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டரில் நடிகைகள் பெயரில் தொடர் மோசடிகள் நடக்கின்றன. நடிகைகளின் படங்கள் மற்றும் செய்திகளை அவற்றில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். அவற்றை உண்மை என்று நம்பிய ரசிகர்களும் நடிகைகளுடன் பேசுவது போல் கருத்துக்கள் பரிமாறி வருகின்றனர்.
நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா போன்றோர் பெயர்களில் இதுபோல மோசடிகள் நடந்துள்ளன. போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமன்னா பெயரிலும் பேஸ்புக், டுவிட்டரில் மோசடி நடக்கிறது. அவர் நடிக்கும் பட விவரங்கள், படப்பிடிப்பு நிகழ்ச்சி நிரல்கள், ஸ்டில்கள் போன்றவை அவற்றில் போடப்பட்டு உள்ளன. அது தமன்னாவின் பேஸ்புக் என ரசிகர்கள் ஏமாந்து தொடர்பு வைத்துள்ளனர்.
இந்த மோசடி தமன்னா கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சியானார். பேஸ்புக், டுவிட்டரில் நான் இல்லை. அவர்கள் ஏமாற வேண்டாம் என்று அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Comments
Post a Comment