Tuesday,24th of July 2012
சென்னை::ரஜினி, கமல் நடித்த படத்தை மறு ரிலீஸ் செய்ய டிஜிட்டலுக்கு மாற்றும் பணி நடக்கிறது. ‘16 வயதினிலே', ‘அவர்கள்' உள்ளிட்ட படங்களில் பல ஆண்டுகளுக்கு முன் இணைந்து நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. அவர்களை இணைத்து படம் இயக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து கே.பாலசந்தர் இயக்கத்தில் 1977ம் ஆண்டு ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். சிவாஜி நடித்த ‘கர்ணன்' படம் சமீபத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.
இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 100 நாட்கள் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இதுவே ரஜினி, கமல் படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது. ‘நினைத்தாலே இனிக்கும்' படத் தின் பழைய நெகடிவ் நவீன டிஜிட்டல் முறையில் மாற்றப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. கமல் நடத்தும் இசைக் குழுவில் கிடார் இசை கலைஞராக இருக்கிறார் ரஜினி. இதற்கிடையில் இந்த குழுவில் இடம்பிடிக்கிறார் ஜெயப்பிரதா. கமலுக்கும், ஜெயப்பிரதாவுக்கும் காதல் மலர்கிறது. இவர்கள் காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் இப்படத்தின் கதை. கிடார் கலைஞராக வரும் ரஜினி நகைச்சுவை காட்சிகளிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment