பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்!!!

Thursday,5th of July 2012
சென்னை::நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பரங்கிமலை ஒன்றிய விஜய் ரசிகர் மன்றம் சார்பில் மக்கள் மன்றம் என்ற பெயரில் பெயர் பலகை திறப்பு விழா பெருங்களத்தூர் குண்டுமேட்டில் நேற்று நடைபெற்றது. பரங்கிமலை விஜய் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த தேமுதிகவினர் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்த பீர்கன்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசை பார்த்த தேமுதிகவினர் ஓட்டம் பிடித்தனர். கைகலப்பில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த செந்தில், தமிழ்செல்வன், சேகர் ஆகியோர் காயமடைந்தனர். இது தொடர்பாக தேமுதிகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவை சேர்ந்த ஆனந்தன், கந்தன், தீனு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments