
சென்னை::நயன்தாரா, திரிஷா இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்தது. ஒருவரின் படவாய்ப்பை இன்னொருவர் தட்டிபறித்த வண்ணம் இருந்தனர். குருவி படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். கடைசி நேரத்தில் நயன்தாராவை நீக்கி விட்டு திரிஷாவை சேர்த்தனர்.
சத்யம் படத்தில் விஷாலுடன் நடிக்க திரிஷாவுக்கு வந்த வாய்ப்பு நயன்தாரா கைக்கு மாறியது. தெலுங்கிலும் படங்களில் நடிக்க இருவரிடமும் போட்டி நிலவியது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூதுவர் ஆவதற்கும் இருவரும் மோதிக் கொண்டனர். சினிமா விழாக்களிலும் இருவரும் சந்திப்பதை தவிர்த்தனர்.ஒருவர் போகும் விழாவுக்கு மற்றவர் செல்வது இல்லை.
பல வருடங்களாக நீடித்து வந்த இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு தினங்களுக்கு முன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர்-நடிகைகளின் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
இதில் நயன்தாரா, திரிஷாவும் கலந்து கொண்டனர். அப்போது திரிஷா திடீரென நயன்தாரா உட்கார்ந்திருந்த இருக்கை நோக்கி சென்றார். கையை பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். நயன்தாராவும் பதிலுக்கு திரிஷாவிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு முத்தமிட்டுக் கொண்டனர். இந்த காட்சியை பார்த்த சக நடிகர்-நடிகைகள் வியப்படைந்தனர். பிறகு நீண்டநேரம் அருகருகே உட்கார்ந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர்.
Comments
Post a Comment