நான் ஒரு கடன் காரணைப்போல உணர்கிறேன்" ரஜினி உறுக்கம்!!!

Thursday,26th of July 2012
சென்னை::நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'கும்கி'. 'மைனா' படத்திற்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூலை 26) சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சத்யராஜ், கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார்கள். இந்த நிகழ்ச்சியை இயக்குநர் கெளதம் மேனன் தொகுத்து வழங்கினார்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், "விக்ரம் பிரபு முதல் அடியை ரொம்ப பெரிதாக எடுத்து வைத்திருக்கிறார். இனி தொடர்ந்து எந்த மாதிரியான படங்களில் நடிப்பது என்று பயம் இருக்கும். பயம் இருக்கலாம் கவலை இருக்க கூடாது." என்று கூறினார்.

கமலை தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், "என்னை இந்த நிகச்சிக்காக பிரபு அழைத்த போது நான் முதலில் முடியாது என்று தான் மறுத்து விட்டேன். ஒரு விழாவுக்கு சென்று விட்டு மற்ற விழாவுக்கு போகவில்லை என்றால் அது மற்றவர்களுககு வருத்தம் அளிக்கும். எனக்கு அனைவர்களும் நண்பர்கள் தான். அதனால் தான் மறுத்தேன். இருந்தாலும் பிரபு எனது இல்லத்திற்கு வந்து அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சென்றார். அதைப் பார்த்து என்னால் வராமல் இருக்க முடியவில்லை. அதனால் இங்கு வந்தேன்.

நான் ஏன் விழாக்களில் கலந்துகொள்வதில்லை என்பதை இங்கு சொல்ல நினைக்கிறேன். நான் திரும்ப இங்கு நின்று கொண்டு உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால் அது கடவுலின் அருள் தான். தமிழக மக்களும், ரசிகர்களும் எனக்காக எத்தனை பிரார்த்தனைகள், எத்தனை வேண்டுதல்கள், உங்களால் தான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். அப்படி இருக்கும் நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று யோசித்துப் பார்த்தபோது, ஏதோ கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்தால், ஒருவர் எப்படி கடன் கொடுத்தவர்களைப் பார்த்து ஓடி போய் ஒளிவாரோ அந்த உணர்வு எனக்கு ஏற்படுகிறது.

ஹாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளர் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தை கமல் இயக்கி நடிக்கப் போகிறார். இதனால் அவர் தமிழ் திரையுலகிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்." என்று உறுக்கமாக ரஜினிகாந்த் பேசினார்.

Comments