
சென்னை::அமீர் இயக்கி வரும் 'ஆதிபகவன்' படத்தின் பாடல் மிக்ஸிங்கிற்காக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஜெர்மனிக்கு சென்றிருக்கிறார்.
ஜெயம் ரவி நடிக்க, அமீர் இயக்கும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அமீரின் இயக்கத்தில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல்களும் சாதாரணமாக இல்லாமல், இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் வித்தியாசப்படுத்தி காட்டும் முயற்சியில் யுவன்சங்கர் ராஜா ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக பாடல்களை ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற ஸ்டுடியோ ஒன்றில் மிக்ஸிங் செய்யப் போகிறார். இதற்காக ஜெர்மனி பறந்திருக்கும் யுவன்சங்கர் ராஜா, அமீருடன் 'பரூத்திவிரன்' படத்தில் இணைந்து வித்தியாசமான இசையையும், ஹிட் பாடல்களையும் கொடுத்தது போன்று 'ஆதிபகவன்' படத்திலும் வேறு ஒரு இசையை கொடுக்க இருக்கிறாராம்.
Comments
Post a Comment