இலங்கை தமிழருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் ஆண்டனி!!!

Tuesday,24th of July 2012
சென்னை::இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஹீரோவாக நடித்து இசையமைக்கும் படம் 'நான்'. இப்படத்திற்காக ஒரு டியூனை தனது இனணையதளத்தில் வெளியிட்டு, அதை பொது மக்கள் டவுண்லோட் செய்து அந்த டியூனுக்கு ஏற்ற வரிகளை எழுதி அனுப்பலாம். அப்படி எழுதி அனுப்பும் பாடலில் சிறந்த பாடலை தனது படத்தில் இடம்பெற செய்வேன். மேலும் அவர்களுக்கு தான் இசையமைக்கும் படங்களிலும் பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுக்கப்படும் என்று விஜய் ஆண்டனி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் பல ஆயிரம் பேர்கள் பாடல்களை எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அவற்றை நேரடியாக பரிசீலனை செய்த விஜய் ஆண்டனி, அதில் சிறந்த பாடலாக இலங்கை தமிழரான அஸ்மின் என்பவருடைய பாடலை தேர்வு செய்து படத்தில் இடம்பெறவும் செய்திருக்கிறார். "தப்பெல்லாம் தப்பேயில்லை சரியெல்லாம் சரியேயில்லை..." என்று தொடங்கும் இந்த ஒரு பாடல் மட்டும் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளான (ஜூலை 24) வெளியாகிறது. மற்ற அனைத்துப் பாடல்களையும் வெளியிடும் நிகழ்ச்சி வரும் ஜூலை 29ஆம் தேதியன்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற இருக்கிறது.

பாடல்கள் வெளியீட்டுக்குப் பிறகு, படத்தை அடுத்த மாதம் வெளியிட விஜய் ஆண்டனி முடிவு செய்திருக்கிறார்.

Comments