இயக்குனர் பற்றி நடிகர் சஸ்பென¢ஸ்!!!:

Monday, 2nd of July 2012
சென்னை::நம்மூர் ஓல்டு லட்சுமி நடிகை நடிச்ச மல்லுவுட் சட்டகாரி படத்தை ரீமேக் செய்யுறாங்களாம்... இதுல ஓல்டு நடிகை நடிச்ச பாத்தரத்துல நடிக்க நித்யமான நடிகைய இயக்கம் செலக்ட் பண்ண நெனச்சாராம். அவர பாத்தப்ப ஹைட் ரொம்ப கம்மியா இருந்தாராம். இதயடுத்து அவருக்கு வரவருந்த வாய்ப்பு பறிபோயிடுச்சாம். அவருக்கு பதிலா இப்ப புது நடிகைய ஹீரோயினாக்கி இருக்காங்களாம்...

பெரிய இயக்குனர்கள் படத்துல அடுத்தடுத்து புக்கான சமந்த ஹீரோயினுக்கு கண்ணுபட்டு போச்சாம்... மணி இயக்கத்துல இருந்து விலகின நடிகை அடுத்து பிரமாண்ட இயக்கம் படத்துல இருந்தும் விலகுன கையோடு வாங்க அட்வான்ஸயும் திருப்பி கொடுத்துட்டாராம். இப்ப அவருக்கு ஒரே சப்போர்ட் வாரண இயக்கம்தானாம். சமந்தவோட குறுகிய கால வளர்ச்சிய பாத்து சில ஹீரோயினுங்க கண்ணுபோட்டுட்டாங்க அதான் அவ ருக்கு இந்த இறங்குமுகம்னு நடிகையோட நெருக்கமான பிரண்ட்ஸுங்க சொல்றாங்களாம். அதுக்கு பரிகாரமா சில கோயில்களோட பேர சொல்லி அங்க போய் கும்பிட சொல்லி இருக்காங்களாம்...

சில்க் வேஷத்துல நடிச்சி டாப் பட்டியல்ல இடம்புடிச்ச பாலிவுட் வித்யா ஹீரோயினுக்கு சவுத்லேயிருந்து சான்ஸ் பறக்குதாம்...இப்போதைக்கு சவுத்பக்கம் வர்ற எண்ணமில்லன்னு நடிகை சொல்றாராம். ஏற்கனவே பட்ட அவமானம் போதும்னு நடிகை புலம்புறாராம்...

ஸ்டன்ட் கோழி ஹீரோகிட்ட கால்ஷீட் கேட்டு போற இயக்குனருங்க அவர் கேக்குற சம்பளத்தை கேட்டு ஷாக் ஆகுறாங்களாம்... லிங்கு இயக்கமும் இப்படி ஷாக் ஆகி அவரை வெச்சி இயக்க இருந்த படத்தை டிராப் பண்ணிட்டாராம். இது பற்றி ஸ்டன்ட் கோழி ஹீரோகிட்ட கேட்டப்போ, ‘எனக்கு என்ன தகுதியோ அந்த சம்பளம்தான் கேக்குறேன். லிங்கு இயக்கத்தோட படத்துல நடிக்காததுக்கு வேறு காரணம் இருக்குÕனு சஸ்பென்ஸ் வைக்க¤றாராம்...

அடர்ந்த காட்டு பகுதில பிரகாச ஹீரோவோட சாங் படமாக்க ஆனந்த இயக்கம் லொகேஷன தேர்வு செஞ்சாராம்... காட்டுக்குள்ள ரொம்ப நேரம் நடந்துபோனபிறகுதான் லொகேஷனுக்கு போக முடியும்னு தகவல் தெரிஞ்சி ஹீரோ லொகேஷன மாத்தச் சொல்லிட்டாராம்... இப்ப அந்த லொகேஷன்மாதிரியே செட்டுபோட்டு ஷூட்டிங் நடத்தப்போறாங்களாம். இது பற்றி பட யூனிட்ல கேட்டா பாதுகாப்பு காரணமா காட்டுபகுதி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டோம்ன்னு சமாளிக்குறாங்களாம்...

டைவர்ஸுக்கு பிறகு நடிக்க வந்த செவன் ஜி ஹீரோயினுக்கு நடுத்தர ஏஜ் கேரக்டரா வந்துச்சாம்...ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு முரண்டு பிடிச்சதாலே அவருக்காக சில இயக்குனருங்க எழுதி வச்சிருந்த கேரக்டர்ல வேற நடிகைகளை ஒப்பந்தம் பண்ணிட்டாங்களாம்... இதுக்கிடையே ஹீரோயினா நடிச்ச வாக்குமூல படம் எடுபடமா போயிடுச்சு. இப்போ கேரக்டர் ரோலுக்கு தயாருன்னு சொல்றாராம். ஆனா அவரை நடிக்க கூப்பிடத்தான் ஆளில்லையாம்...

Comments