
சென்னை::தொடர்ந்து சைக்கோ டைப் கேரக்டரில் நடித்து - தனுஷுக்கு போரடித்ததோ இல்லையோ நமக்கு சலித்துவிட்டது. லைட்டான சப்ஜெக்டில் தனுஷைப் பார்க்க முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறியாக நேற்று வரை இருந்தது. சற்குணம் படம் அதற்கு எண்ட் கார்ட் போட்டிருக்கிறது.
வாகை சூட வா படம் விமர்சன ரீதியாக ஓகே என்றாலும் கலெக்சனில் படுபயங்கர ப்ளாப். சினிமா வியாபாரமும் கூட என்பதை புரிந்து தனது அடுத்தப் படமான சொட்டவாளகுட்டியை காமெடியும் காதலுமாக ஏறக்குறைய களவாணி பாணியில் எடுக்கிறார் சற்குணம். இதில் தனுஷ் ஹீரோ.
தனுஷ் தனது கமிட்மெண்ட்களை முடித்த பிறகு செப்டம்பரில் படம் தொடங்குகிறது. பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த குரூப் கம்பெனி கதிரேசன் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
இசை அனேகமாக யுவன் ஷங்கராக இருக்கலாம்.
Comments
Post a Comment