ரஜினி - கமலுக்கு நடிகர் சங்கம் கடிதம்!!!

Tuesday, 3rd of July 2012 சென்னை::நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தலைவராக சரத்குமார், பொதுச் செயலாளராக ராதாரவி, துணைத் தலைவர்களாக விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளராக வாகை சந்திரசேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நடிகர்கள் சிம்பு, ஸ்ரீகாந்த், டெல்லி கணேஷ், சந்தான பாரதி, நடிகைகள் குயிலி, நளினி, சி.ஐ.டி. சகுந்தலா, சத்ய பிரியா உள்ளிட்ட பலர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வானார்கள்.

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் தடவையாக நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 7-ந்தேதி மாலை 6 மணிக்கு தியாகராய நகரில் உள்ள ஜெர்மன் ஹாலில் கூடுகிறது.

இந்த பொதுக்குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து ரஜினி, கமலுக்கு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், அஜித் குமார், சூர்யா, விஷால், ஜெயம்ரவி, கார்த்தி மற்றும் நடிகைகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் குழுவுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. வரவு- செலவு கணக்கு தாக்கல் செய்யப் படுகின்றன.

Comments