Monday, 2nd of July 2012
சென்னை::விஜய்க்கு 'துப்பாக்கி', அஜீத்திற்கு 'பில்லா 2' படத்தினைப் போலவே சூர்யா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் 'மாற்றான்'.
சூர்யா, காஜல் அகர்வால் நடித்து வரும் 'மாற்றான்' படத்தினை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிசில் சூர்யா படங்கள் வசூலை குவித்து வருவதால், 'மாற்றான்' படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. 'அயன்' பட வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது கூடுதல் காரணம்.
தற்போது இப்படத்தினை 80 கோடிக்கு விலை பேசி வருகிறார்களாம். அதுமட்டுமன்றி ஜெமினி நிறுவனம் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை சுமார் 12 கோடிக்கு வாங்கி இருக்கிறது.
வெளிநாட்டு உரிமை 12 கோடி என்பது விஜய், அஜீத் படங்களை விட மிகவும் அதிகம். படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜுலை மாத இறுதியில் 'மாற்றான்' படத்தின் இசை வெளியீடு இருக்கும். படத்தினை ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது படக்குழு.
ஆனால், இன்னும் முழுமையாக படப்பிடிப்பு நிறைவு பெறவில்லை என்பதாலும், படத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிறைய இருப்பதால் ஆகஸ்ட் 15 படம் வெளிவருது சந்தேகம் தான் என்கிறார்கள்.

Comments
Post a Comment