
சென்னை::சென்னையில் நடந்த சரக்கு பார்ட்டியில் நடிகை டாப்ஸி யாருக்கு சொந்தம் என நடிகர் மகத்தும் மஞ்ச் மனோஜும் அடிதடியில் இறங்கிய செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம்.
அந்த சண்டை இப்போது போலீஸ் கேஸாகி, நீதிமன்றத்துக்குப் போகும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த மோதலில் மகத்தின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்துக்கு சிகிச்சையளிக்க ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அடிதடி சமாச்சாரம் என்பதால், இதனை போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
போலீஸ் விசாரணையின் போது மஞ்ச் மனோஜ் மீது மகத் கூறிய பரபரப்பு குற்றச்சாட்டு இது:
கடந்த 7-ந் தேதி அன்று இரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழா முடிந்தவுடன், சினிமா வட்டாரத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி இரவு விருந்துக்கு அழைத்தார்.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அவரது கெஸ்ட் ஹவுஸில் இரவு 11 மணிக்கு மேல் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அந்த விருந்தில் நானும் கலந்து கொண்டேன். நள்ளிரவு 2 மணிக்கு விருந்து முடியும் தருவாயில், அதே விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நடிகர் மனோஜ் என்னை தனியாக அழைத்தார். நான் அவரை அங்கேயே பார்த்தேன். அவருடன், அவரது நண்பர்கள் 3 பேரும் இருந்தனர்.
நான் எதிர்பாராத வகையில், மனோஜும், அவரது நண்பர்களும், என் முகத்தில் குத்தினார்கள். என்னை கொலை செய்துவிடுவேன் என்று மனோஜ் ஆவேசமாக சத்தம் போட்டு மிரட்டினார்.
அங்கு இருந்தவர்கள் மனோஜையும், அவரது நண்பர்களையும் விலக்கிவிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். மனோஜ் இதுபோல் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே எனக்கும், அவருக்கும் பிரச்சினை இருந்தது. நண்பர்கள் மூலம் சமாதான பேச்சு நடத்தப்பட்டது.
என்னை தாக்கிய நடிகர் மனோஜ் பெரிய பக்கபலம் உள்ளவர். அவரது தந்தை நடிகர் மோகன்பாபு ஆந்திராவில் பெரிய ஆள். எனவே மனோஜால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மனோஜ் மீதும், அவரது நண்பர்கள் 3 பேர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு உரிய பாதுகாப்பும் வழங்கவேண்டும்.
இவ்வாறு தனது புகாரில் நடிகர் மஹத் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் அடிப்படையில் நடிகர் மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர்.
விமானத்தில் பறந்துவிட்ட மனோஜ்
இந்த வழக்கு அடிப்படையில், நடிகர் மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்ய தேடியதாகவும், அவர்கள் விமானத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்துக்கு தப்பிச்சென்று விட்டதாகவும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மனோஜை கைது செய்ய தேவைப்பட்டால் தனிப்படை போலீசார் ஹைதராபாத் செல்வார்கள் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
நடிகர்கள் மனோஜ்-மகத் இந்த மோதல் விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகை டாப்ஸியை யார் காதலிப்பது என்பதில்தான் இவர்களுக்குள் மோதல் நடந்தது.
இந்த சண்டை நடந்தபோது பலரும் அருகில் இருந்துள்ளனர். ஆனால் மகத்தோ, ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளை மாதிரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். நான் சும்மா நின்று கொண்டிருந்தேன். மனோஜ் தன் நண்பர்களுடன் வந்து அடித்தார் என எழுதிக் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த புகாரில் நடிகை டாப்ஸி காதல் பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை
Comments
Post a Comment