
சென்னை::திறமையான நடிகை என்று பெயர் எடுத்த ரோஹினி விரைவில் திறமையான இயக்குநர் என்ற பெயர் எடுக்கவும் தயாராகிவருகிறார்.
ஏற்கனவே கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான ரோஹினி அதை தொடர்ந்து தற்போது 'மாலைப் பொழுதின் மயக்கதிலே' படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
பாடலாசிரியர், விளம்பர படங்களின் கதையாசிரியர், குறும்படங்கள் என திரையுலகில் பல பரிமாணங்களில் தன்னை அடையாளம் காட்டிகொண்ட நடிகை ரோஹினி, தான் இயக்கப் போகும் முதல் படத்திற்கு 'அப்பாவின் மீசை' என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
நடிகை ரோஹினி இயக்கும் இப்படத்தை இயக்குநர் சேரன் தயாரிக்கப் போகிறார்.
Comments
Post a Comment