சில்க் வேடத்துக்கு என்னைவிட்டா ஆள் கிடையாது" நமீதா!!!

Thursday,5th of July 2012
சென்னை::பட வாய்ப்புகளே இல்லையென்றலும், பந்தாவா அறிக்கை வெளியிட்டு காலம் தள்ளும் நடிகைகளில் நமீதா முக்கியமானவர். தன்னை பெரிய கவர்ச்சி பாம் என்று நினைத்துகொண்டிருக்கும் நமீதா, சில்க் வேடத்தில் நடிக்க தன்னை விட்டால் ஆளே இல்லை. என்று கூறியிருக்கிறார்.

அவரிடம் 'தி டர்ட்டி பிக்சர்' தமிழ் ரீமேக்கில் நப்பீர்களா என்று பலரும் கேட்கிறார்களாம். (படம் எடுக்கும் தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ கேட்டாரா மேடம்?) அதனால் அத்தனை பேருக்கும் ஒட்டுமொத்தமாக தனது பதிலை சொல்லி விடுகிறேன் என்று கூறிய நமீதா, "'தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிப்பீர்களா என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். நடிப்பேன்...நடிப்பேன்...நடிப்பேன். என்னிடம் அந்த படத்திற்காக கால்ஷீட் கேட்டால் கண்டிப்பாக தருவேன். இந்தியில் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு விஷயம் சொல்லட்டுமா...சில்க் ஸ்மிதா வேடத்திற்கு என்னைவிட பொருத்தமான நடிகை இருக்க முடியுமா தெரியவில்லை. அந்த கேரக்டரை அந்த அளவு விரும்புகிறேன்.

இப்போது உடம்பை இன்னும் ஃபிட்டாக்கிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக உள்ளேன். சில நாட்கள் கழித்து என்னைப் பார்ப்பவர்கள் நிச்சயம் ஆச்சர்யப்படுவார்கள்." என்றார்.

Comments