Monday, 2nd of July 2012
சென்னை::'பூ' படத்திற்குப் பிறகு சசி இயக்கும் படம் '555'. இதில் ஹீரோவாக பரத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'சித்து பிளஸ் 2' படத்தின் நாயகி சாந்தினி நடிக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. இதற்கு காரணம் பரத் தானாம்.
இந்தப் படத்தில் பரத் இரு வேறு கெட்டப்புகளில் நடிக்கிறாராம். படத்தின் முதல் பாதியில் வரும் பரத்தின் கதாபாத்திரம், இரண்டாம் பாதியில் முற்றிலும் மாறுபடுமாம். அதனால் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது உடல்வாகை மாற்றிக் கொள்ள பரத்துக்கு இரண்டரை மாத காலம் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் தான் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்படுள்ளதாம்.
தற்போது இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பரத்தின் கெட்டப் மாற்றத்திற்குப் பிறகு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்கு செல்ல இருக்கிறார்கள்.
இதுவரை ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து வந்த சந்தானம், இப்படத்தில் முதல் முறையாக ஹீரோவுக்கு சகோதரராக நடிக்கிறார். அதாவது இந்த படத்தில் பரத்திற்கு சந்தானம் தான் அண்ணனாம். மேலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மனோ பாலா, இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

Comments
Post a Comment